சேலம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 48). நேற்று முன்தினம் இரவு அங்குள்ள ஒரு கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை தாக்கி அவரிடம் இருந்து 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு சென்றது.
இது குறித்த புகாரின் பேரில் அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை தேடி வருகின்றனர்.
இதே போன்று சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (34). கார் டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த 3 பேர் கும்பல் அவரை தாக்கி அவரிடம் இருந்து செல்போன், மற்றும் மோட்டார் சைக்கிளை எடுத்து சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை தேடி வருகின்றனர்.