சேலம் அன்னதானப்பட்டி கண்ணகி தெருவைச் சேர்ந்த சந்திரா (65) என்பவர் தைப்பூச விழாவை முன்னிட்டு தனது மகள்களுடன் காளிப்பட்டி கந்தசாமி முருகன் கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றார். மாலை கோவில் அருகே நின்றிருந்த அவரை, விளக்கு போடச் சென்ற மகள்கள் திரும்பி வந்து பார்த்தபோது காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.