தவெக தலைவர் விஜய் இன்று சேலம் வருகை.. பலத்த பாதுகாப்பு

த. வெ. க. தலைவர் விஜய், நிர்வாகிகளுடன் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று (பிப்.13) காலை 11 மணிக்கு தனிவிமானம் மூலம் சேலம் ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் கூட்டம் நடைபெறும் திடலுக்கு செல்கிறார். சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளில் இருந்து 5000 நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. கூட்டம் நடைபெறும் இடத்தில் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

தொடர்புடைய செய்தி