சேலத்தில் டிசம்பர் 4ஆம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள அனுமதி கோரி நிர்வாகிகள் மனு அளித்தனர். ஆனால், அன்றைய தினம் கார்த்திகை தீப விழா பணிகள் இருப்பதால் பாதுகாப்பு அளிக்க முடியாது எனக்கூறி காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதனால், கட்சி நிர்வாகிகள் மாற்று தினத்தில் அனுமதி கேட்டு மனு அளிக்க முடிவு செய்துள்ளனர்.