சேலம் கொண்டலாம்பட்டி பெரியபுத்தூர் பகுதியில் வசிக்கும் 66 வயது மூதாட்டி லட்சுமி, நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டைப் பூட்ட மறந்ததால், மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து கழுத்தில் அணிந்திருந்த அரை பவுன் தாலி சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பி ஓடினார். இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைபறிப்பில் ஈடுபட்ட மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.