சந்திரகிரகணத்தையொட்டி இன்று கோவில்களில் நடை அடைப்பு

இன்று செவ்வாய்க்கிழமை நிகழ உள்ள சந்திரகிரகணத்தையொட்டி, சேலம் கோட்டை பெருமாள் கோவில் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை மூடப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு கோவில் வாசலில் வைக்கப்பட்டுள்ளது. நாளை புதன்கிழமை காலை 6 மணிக்கு கோவில் வழக்கம்போல் திறக்கப்படும். இதேபோல், சுகவனேசுவரர் கோவில், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவில் உள்ளிட்ட பல கோவில்களிலும் சந்திரகிரகணத்தையொட்டி நடை அடைக்கப்படும்.

தொடர்புடைய செய்தி