நேற்று (மார்ச் 15) மாலை பிரபாகரன் அணைமேடு ரெயில்வே மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார், அவருடைய மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் நிலைதடுமாறிய பிரபாகரன் அங்கிருந்த தடுப்பு சுவர் மீது விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பிரபாகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தகவல் கிடைத்ததும் அஸ்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் பிரபாகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்த பிரபாகரனுக்கு சொந்த ஊர் தர்மபுரி மாவட்டமாகும். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.