சேலம் ஒய்.எம்.சி.ஏயில் கோடைகால பேட்மிண்டன் விளையாட்டு போட்டி

சேலம் ஒய். எம். சி. ஏ. யில் மாணவ-மாணவிகளுக்கு கோடைகால பேட்மிண்டன் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சேலம் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகுமார், வணிகர் சங்க செயலாளர் வர்கீஸ் ஆகியோர் கலந்து கொண்டு, போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர். போட்டிக்கான ஏற்பாடுகளை ஒய். எம். சி. ஏ. ஒருங்கிணைப்பாளர் ஆபிரகாம், பயிற்சியாளர் ஜெயராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி