சேலம் கோரிமேட்டில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டும் மையத்தில் குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ பதவிக்கான முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு நேற்று தொடங்கியது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டு மைய துணை இயக்குனர் (பொறுப்பு) ராதிகா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குனர் கவிதா தலைமை தாங்கி, போட்டி தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து விளக்கம் அளித்து பேசினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.