போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக பீகார் மாநிலம் பரவுனிக்கு செல்லும் சிறப்பு ரயில் (06195) நாளை (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு எர்ணாகுளத்தில் புறப்பட்டு, அலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு வழியாக இரவு 12.10 மணிக்கு சேலம் வந்தடைகிறது. அங்கிருந்து 12.13 மணிக்கு புறப்பட்டு, ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக வருகிற 18-ந் தேதி காலை 7 மணிக்கு பரவுனி சென்றடையும் என சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.