கோட்டை மாரியம்மன்கோவிலில் முதியதம்பதிகளுக்கு சிறப்பு செய்தல்

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், 70 வயது பூர்த்தி அடைந்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யப்படும் என அமைச்சர் சேகர் பாபு அறிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக, சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல் தலைமையில் 25 முதிய தம்பதிகளுக்கு இன்று சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அவர்களுக்கு ரூபாய் 2500 மதிப்புள்ள புடவை, வேஷ்டி, சட்டை, பழங்கள் மற்றும் மாலைகள் வழங்கப்பட்டு சிறப்பு மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி