இதனை தொடர்ந்து பல்வேறு விதமான காய் கனிகளுடன் மூலவருக்கு விசு கனி அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் தந்திரி கேரளா முறைப்படி சிறப்பு பூஜை செய்தார். அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தமிழ் புத்தாண்டு தினத்தில் ஐயப்பனை வழிபட வரும் பக்தர்களுக்கு ஐயப்பன் பாதத்தில் வைக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயமும், லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. ஐயப்பனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு