சேலம் அம்மாப்பேட்டை குமரகிரி தண்டாயுதபாணி கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி நேற்று காலை முருகன், வள்ளி, தெய்வானைக்கு பால், இளநீர், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மதியம் 12. 30 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கோவில் அடிவாரம் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.
கூட்டணி பேச்சுவார்த்தை: அ.ம.மு.க. தவிர்க்க முடியாத சக்தி - தினகரன்