சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சேலம், மேச்சேரி மற்றும் தர்மபுரியில் இருந்து இந்த சிறப்பு பேருந்துகள் செல்கின்றன. மேலும், சேலத்தில் இருந்து பவானி கூடுதுறை மற்றும் சித்தர்கோவிலுக்கும் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம் தினமும் 1,900 பேருந்துகளை இயக்கி வருகிறது.