சேலம்: இஸ்ரோ ராக்கெட்டிற்கு சோனாஸ்பீட், ஸ்டெப்பர் மோட்டார்

சேலம் சோனா தொழில்நுட்ப கல்லூரியில் முதன்மையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான சோனாஸ்பீட் (சோனா ஸ்பெஷல் பவர் எலக்ட்ரானிக்ஸ் அண்டு எலக்ட்ரிக் டிவைஸ்) நாசா-இஸ்ரோ செயற்கைக்கோள் ரேடார் பணிக்கான சிம்ப்ளக்ஸ் நிரந்தர காந்த ஸ்டெப்பர் மோட்டாரை உருவாக்கி இஸ்ரோவிற்கு வழங்கியுள்ளது. இது பெருமையாக இருப்பதாக கல்லூரி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 

நேற்று முன்தினம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து மாலையில் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 வெற்றிகரமாக ஏவப்பட்டது. சோனாஸ்பீட்டின் இஸ்ரோவுடனான நீண்டகால தொடர்பு சோனாஸ்பீட் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இஸ்ரோவின் நம்பகமான தொழில்நுட்பத்திற்கு உறுதுணையாக இருந்து வருகிறது. 

சந்திராயன்-2, சந்திராயன்-3 மற்றும் ஆர்.எல்.வி. தரையிறங்கும் சோதனை உள்ளிட்ட முந்தைய பயணங்களுக்கு பி.எம். ஸ்டெப்பர் மோட்டார்கள், பி.எல்.டி.சி. மோட்டார்கள் மற்றும் எதிர்வினை சக்கரங்கள் போன்ற விண்வெளித் தர மின் எந்திரங்களை வழங்குகிறது.

தொடர்புடைய செய்தி