மேட்டூர் கருமலைக்கூடல் பகுதியைச் சேர்ந்த வெள்ளிப்பட்டறை தொழிலாளி முருகன் (52), புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். வெள்ளிக்கிழமை சேலத்திற்கு சிகிச்சைக்காக வந்த அவர், மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற த.வெ.க. கூட்டத்தில் நடிகர் விஜய்யைச் சந்திக்கச் சென்றார். கூட்டத்திற்குள் செல்ல முடியாததால், கடிதம் எழுதி வைத்துவிட்டு முருகன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.