இதே அலுவலகத்தில் 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தெருக்கூத்து, நாடகம், பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு, தேவராட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், மல்லர் கம்பம், கும்மி, கோலாட்டம், மரக்கால் ஆட்டம், பரதநாட்டியம், நிகழ்ச்சி நடத்துவோர் மற்றும் இதர கலைக்குழுக்களின் நிகழ்ச்சிகளுக்கான பதிவு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மாவட்ட அளவிலான தேர்வில் பங்கு பெற விரும்பும் கலைக்குழுக்கள் கலை பண்பாட்டு துறையின் இணையதளத்தில் www.artandculture.tn.gov.in வெளியிடப்பட்டுள்ள கூகுள் பார்ம் மூலம் நாளை (வியாழக்கிழமை) மாலைக்குள் விண்ணப்பிக்கலாம். விழாவில் சிறப்பான நிகழ்ச்சி வழங்கிய கலைக்குழுவினர் மாநில அளவிலான தேர்வுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டு 2026-ம் ஆண்டு சென்னை சங்கமம் விழாவில் பங்கேற்க வாய்ப்பு பெறுவார்கள். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்