சேலம் அருகே பள்ளி மாணவன் மாயம்

சேலம் கருப்பூர் மேட்டுப் பகுதியைச் சேர்ந்த ஹரி விக்னேஷின் மகன் சாய் சக்தி (6 ஆம் வகுப்பு) நேற்று பள்ளிக்குச் செல்லாத நிலையில் வீட்டில் தனியாக இருந்தான். மாலை வீடு திரும்பிய தாய், சாய் சக்தி மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். எங்கு தேடியும் கிடைக்காததால், கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி