இந்நிலையில், நேற்று பள்ளி விடுமுறை என்பதால் தரணேஷ் வீட்டில் இருந்தார். வழக்கம்போல் ரம்யா வேலைக்கு சென்றுவிட்டார். நேற்று காலை ரம்யாவின் தந்தை வீட்டிற்குள் வந்துள்ளார். அப்போது, வீட்டில் இருந்து ரம்யாவின் தம்பி மனோஜ் என்பவர் வெளியே சென்றுள்ளார். பின்னர் ரம்யாவின் தந்தை, உள்ளே சென்று பார்த்தபோது, தரணேஷ் பலத்த வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
இதை அவர் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவனை அவரது தாய்மாமன் மனோஜ் அரிவாளால் வெட்டி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.