சேலம்: இளைஞர்கள் மது பாட்டில்களை வீசி எறிந்து ரகளை

சேலத்தில் மது போதையில் இளைஞர்கள் சண்டையிட்டு மது பாட்டில்களை வீசி எறிந்து ரகளையில் ஈடுபட்டதால் பொதுமக்களும் வியாபாரிகளும் அச்சமடைந்தனர்.

சேலம் மத்திய பேருந்து நிலையம் அருகே மதுபான கடைகள் இயங்கி வருவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதாக ஏற்கனவே புகார் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மது போதையில் இளைஞர்கள் சிலர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள போக்குவரத்து கழக பணிமனை முன்பு மது பாட்டில்களை வீசி எறிந்து ரகளையில் ஈடுபட்டதால் பொதுமக்களும் வியாபாரிகளும் அச்சமடைந்தனர். 

தொடர்ந்து ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கிக் கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தொடர்புடைய செய்தி