சேலம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த ரஞ்சித் குமார் (பிசிஏ படித்தவர்) வேலை கிடைக்காமல் தவித்து வந்தார். ஈரோட்டில் நடக்கும் நேர்காணலில் பங்கேற்க கடந்த 29ஆம் தேதி சென்ற அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த அவரது தாயார் வசந்தா, கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ரஞ்சித் குமாரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.