சேலம்: பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. அதிரடி கைது

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் குழந்தைக்கு மந்திரிக்கச் சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த அஜ்ரத் உமர் பாரூக்கை வாழப்பாடி போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சனிக்கிழமை காலை, கூலித் தொழிலாளி ஒருவர் தனது மனைவியுடன் குழந்தைக்கு மந்திரிக்க பள்ளிவாசலுக்குச் சென்றபோது, அங்கு பணிபுரிந்த அஜ்ரத் உமர் பாரூக், இளம்பெண்ணை உள் அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த போலீஸார் உமர் பாரூக்கை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி