அவருடைய வழிகாட்டுதல்படி, சேலம் மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 30 முதல் 40 சதவீதம் வரை வாக்காளர்களைக் கட்சியில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும், சேலத்திற்கு வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும், 2026 சட்டமன்றத் தேர்தலில் மேற்கு மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் வெற்றிபெற உறுதி ஏற்போம் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன இந்தக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
காரைக்குடி தொகுதியில் சீமான் எகிறும் ஆதரவு.. வெற்றி கிடைக்குமா?