சேலம் தெற்கில் போட்டியிட்டு வென்ற விஜய் தமிழன் பார்த்திபனுக்கு தமிழக அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவர் விஜய் மக்கள் இயக்கத்தில் நீண்ட காலமாக இருந்தவர். மேலும், விஜய்யின் கோட் படத்திலும் சிறிய வேடத்தில் நடித்துள்ளார். சென்னை லோக் பவனில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் புதிதாகப் பதவியேற்ற 23 அமைச்சர்களுக்கான துறைகளும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.