தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகை நேற்று சேலத்தில் கொண்டாடப்பட்டது. அதன்படி சேலத்தில் வசிக்கும் தெலுங்கு மொழி பேசும் பொதுமக்கள் யுகாதி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். அதேபோல் யுகாதி பண்டிகையையொட்டி சேலத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து ஆராதனை நடத்தப்பட்டது. இதில் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். யுகாதி பண்டிகையையொட்டி பொன்னம்மாப்பேட்டையில் வீரக்குமாரர்கள் கத்திபோட்டு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்துகொண்டனர்.