சேலம் ஜவுளி பூங்காவில் சாயப்பட்டறையால் பாதிப்பு ஏற்படாது

சேலம் ஜவுளி பூங்காவில் 55 சாயப்பட்டறைகள் அமைத்து நிலத்தடி நீர் மாசுபடும் என பரவும் தவறான தகவல்களை சேலம் யார்ன் கலரிங் பார்க் தலைவர் அழகரசன் மறுத்துள்ளார். அவர் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், "ஜவுளி பூங்காவில் 21 சாயப்பட்டறைகள் மட்டுமே வர உள்ளன. ரூ. 200 கோடியில் அதிநவீன பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுவதால், ஒரு சொட்டு கழிவுநீர் கூட நிலத்திற்கு செல்லாது. நிலத்தடி நீர் மாசுபடாது என உத்தரவாதம் அளிக்கிறேன். மாங்குட்டையில் இருந்து தினமும் 10 லட்சம் லிட்டர் கழிவுநீர் மறுசுழற்சி செய்யப்பட்டு பயன்படுத்தப்படும். போர்வெல் எதுவும் அமைக்கப்படாது" என்றார். சேலம் தொழில் வளர்ச்சிக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி