சேலத்தில் இன்று (பிப்.13) நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய விஜய், வீட்டை விட்டு வெளியே வாருங்கள் என்று கூறுபவர்களுக்கு, என் வீடு தமிழ்நாடு தான் என்றும், 8 கோடி மக்கள் என் குடும்பத்தினர் என்றும் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மற்ற கட்சிகளுக்கு பொதுக்கூட்டம், மாநாடு நடத்த இடம் கொடுக்கும்போது, தனக்கு இடம் மற்றும் பாதுகாப்பு கொடுக்க மறுப்பதாகவும் விஜய் குற்றம் சாட்டினார். மக்களும் நானும் சந்திப்பதை தடுப்பதாகவும் கூறிய விஜய் நீதி கேட்டு மக்களிடம் வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.