சேலம் டாஸ்மாக் ஊழியர்கள் மாவட்ட மேலாளர் ஆபிசை முற்றுகை

சேலம் அருகே சந்தியூரில் உள்ள தமிழ்நாடு வாணிப கழக மாவட்ட மேலாளர் அலுவலகத்தை டாஸ்மாக் பணியாளர்கள் இன்று காலை முற்றுகையிட்டனர். காலி மது பாட்டில்களை பணியாளர்கள் வைக்க அனுமதிக்கக் கூடாது, தனி ஆட்கள் நியமிக்க வேண்டும், விற்பனை தொகை மீறி அபராதம் விதிப்பதை தவிர்க்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர். சேலம் அனைத்து டாஸ்மாக் பணியாளர் சங்கத் தலைவர் ஜம்பு, டாஸ்மாக் அதிகாரிகள் பணி அழுத்தம் தருவதாகவும், காலிப் பாட்டில்கள், பில் குளறுபடிகளுக்கு ஊழியர்களே பொறுப்பேற்க நிர்பந்திப்பதாகவும் குற்றம் சாட்டினார். இதைச் சரி செய்யாவிட்டால், சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்காமல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி