சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான வைகாசி விசாகத் தேரோட்டம் இன்று (மே 30) கோலாகலமாக நடந்தது. இதனையொட்டி, அதிகாலை முதல் சுகவனேஸ்வரருக்கும் சொர்ணாம்பிகை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமிகள் எழுந்தருளினர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர்.