சர்வதேச வூசூ போட்டியில் சேலம் மாணவி சாதனை

ரஷியா தலைநகர் மாஸ்கோவில், மாஸ்கோ வூசூ ஸ்டார்ஸ் என்ற சர்வதேச வூசூ போட்டி நடந்தது. இதில் இந்தியா சார்பில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி நிதிஷா கலந்து கொண்டு வெண்கல பதக்கம் வென்று இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார். 

இந்த சாதனை மாணவியை தமிழ்நாடு வூசூ அசோசியேசன் தலைவர் அலெக்ஸ் அப்பாவு, பொதுச்செயலாளர் ஜான்சன், வூசூ விளையாட்டு தொழில்நுட்ப இயக்குனர் ரவி, சேலம் மாவட்ட வூசூ சங்க தலைவர் நாராயணன், செயலாளரும், தலைமை பயிற்சியாளருமான கோபி, உதவி பயிற்சியாளர்கள் முருகன், செல்வம், இப்ராகிம் ரபீக் மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாவட்ட வூசூ சங்க நிர்வாகிகளும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். 

மாணவி நிதிஷா 1-ம் வகுப்பு முதல் கடந்த 12 ஆண்டுகளாக வூசூ போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார். இதுவரை 30-க்கும் மேற்பட்ட மாவட்ட, மாநில, தேசிய போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளையும், பதக்கங்களையும் வென்றுள்ளார்.

தொடர்புடைய செய்தி