சேலம் மாவட்டம் கந்தம்பட்டி ஆர்டிஓ ஆபீஸ் அருகே தள்ளுவண்டியில் ஜூஸ் கடை நடத்தி வருபவர் மகேஸ்வரி (60). அவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். தனியாக வசித்து வரும் மகேஸ்வரி தன்னுடைய தள்ளுவண்டி பழுதானதால் வியாபாரம் செய்ய முடியாமல் தவித்து வந்தார். அருகிலிருந்தவர்கள் மூலம் இன்ஸ்டாகிராமில் கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பார்த்தசாரதி தன்னுடைய அறக்கட்டளையின் மூலம் மகேஸ்வரிக்கு புதிய தள்ளுவண்டி ஒன்றை அளித்திருக்கிறார். மகேஸ்வரி அவர்களின் உழைப்பிற்கு பரிசாக இதனை வழங்குவதாக பார்த்தசாரதி தெரிவித்தார்.