சேலம் ராஜகணபதி கோவிலில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. கோவில் அறங்காவலர் குழு தலைவர் வள்ளியப்பா, உதவி ஆணையர்கள் சாமிநாதன், அம்சா ஆகியோர் முன்னிலையில் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். முடிவில், உண்டியலில் இருந்து ரூ. 15 லட்சத்து 36 ஆயிரத்து 811 ரொக்கமும், 10 கிராம் தங்கமும், 68 கிராம் வெள்ளியும் காணிக்கையாக வசூலாகி இருந்தது.