சேலம் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஸ்ரீராம் வாழ்த்து

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கே. ஆர். ஸ்ரீராம் சேலம் மாவட்ட குற்றவியல் வக்கீல்கள் சங்க பொன் விழாவிற்கு வாழ்த்து தெரிவித்து செய்தி வெளியிட்டு உள்ளார். அதில் சேலம் மாவட்ட குற்றவியல் வக்கீல்கள் சங்கம் கடந்த 1974-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. 

கடந்த 50 ஆண்டுகளில், சேலத்தில் நீதி வழங்கும் அமைப்பின் முக்கிய தூணாகவும், சட்டப்பூர்வ வாழ்வியல் முறைக்கு சிறந்து விளங்கும் ஒரு கலங்கரை விளக்கமாகவும் உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்தேதி சேலம் வக்கீல்கள் சங்கம், சேலம் மாவட்ட குற்றவியல் வக்கீல்கள் சங்கம், முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் அரசு வக்கீல்களுடன் இணைந்து மாவட்ட அளவிலான குறை தீர்க்கும் குழு அமைக்கப்பட்டது. இது பார் மற்றும் பெஞ்ச் இடையே இணக்கமான உறவை வளர்ப்பதில் பாராட்டத்தக்க நடவடிக்கை ஆகும். 

சேலம் மாவட்ட குற்றவியல் வக்கீல்கள் சங்கம் தனது பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வேளையில் இந்த சங்கத்திற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.இதையடுத்து குற்றவியல் வக்கீல்கள் சங்க தலைவர் இமயவரம்பன் தலைமையில் வக்கீல்கள் சிலர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கே. ஆர். ஸ்ரீராமை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி