சேலம்: அந்த தேதி வேண்டாம்.. தவெகவினருக்கு போலீஸ் பதில்

சேலத்தில் டிசம்பர் 4ஆம் தேதி நடிகர் விஜய் பிரசாரம் மேற்கொள்ள தவெகவினர் சீலநாயக்கன்பட்டி, போஸ் மைதானம், கோட்டை மைதானம் ஆகிய 3 இடங்களில் அனுமதி கோரியிருந்த நிலையில், காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. கார்த்திகை தீபம், பாபர் மசூதி இடிப்பு தினம் வருவதால் டிசம்பர் 4ஆம் தேதி தவிர மற்ற நாட்களில் அனுமதி அளிக்க தயார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மனுவில் மக்கள் கூட்டத்தின் எண்ணிக்கை குறிப்பிட்டால், அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி