சேலம் மாவட்டத்தின் புதிய கலெக்டர் இளம் பகவத் பொறுப்பேற்பு

சேலம் மாவட்டத்தின் 176வது ஆட்சியராக இளம் பகவத் நேற்று (மே 18) பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன்பு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக பணியாற்றி காத்திருப்போர் பட்டியலில் இருந்தார். சட்டமன்றத் தேர்தலின் போது இடமாற்றம் செய்யப்பட்ட பிருந்தா தேவிக்கு பதிலாக அருண் தம்புராஜ் சேலம் ஆட்சியராக நியமிக்கப்பட்டார். தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்ற பின், அருண் தம்புராஜ் தகவல் மற்றும் செய்தி துறை ஆணையராக மாற்றப்பட்டார். தற்போது இளம் பகவத் சேலம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார்.

தொடர்புடைய செய்தி