தமிழக பள்ளி கல்வித்துறையில் 11 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த கபீர் சென்னைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி சேலம் பொறுப்பேற்றார். சேலம் தொடக்க கல்வி அலுவலர் மான்விழி பதவி உயர்வு பெற்று ஈரோடு முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டார். நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மகேஸ்வரி புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.