இந்திய கபடிவீராங்கனை கார்த்திகாவுக்கு சேலம் கவுன்சிலர் பரிசு

சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த தூய்மைப் பணியாளரின் மகளும், இந்திய கபடி வீராங்கனையுமான கார்த்திகா, ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி தங்கப் பதக்கம் வென்றார். இந்த நிலையில், சேலம் மாநகராட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் இமயவரம்பன், வீராங்கனை கார்த்திகாவுக்கு பரிசு வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி, கவுன்சிலர் இமயவரம்பன் நேற்று சென்னை சென்று கார்த்திகாவை நேரில் சந்தித்து, தங்க நினைவுப் பரிசு மற்றும் ரூ. 50 ஆயிரம் வழங்கிப் பாராட்டினார். மேலும், கார்த்திகாவின் பயிற்சியாளர் ராஜூவுக்கு ரூ. 10 ஆயிரம் பரிசும் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி