சேலம் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, நாளை (10ம் தேதி) ஒரே நாளில் 13 லட்சத்து 42 ஆயிரம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக மாவட்டம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் என மொத்தம் 5,184 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என கலெக்டர் பிருந்தாதேவி அறிவித்துள்ளார்.