தமிழகத்திற்கு நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து தி. மு. க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர தி. மு. க. செயலாளர் ரகுபதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. தி. மு. க. , ம. தி. மு. க. , திராவிடர் கழகம், காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் பலர் இதில் பங்கேற்றனர்.