மேலும், எனது நிதி நிறுவனத்தில் பிரபுமணி என்பவர் போலியான ஆவணத்தை கொடுத்து ரூ. 25 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இந்த மோசடி எனக்கு தெரியவந்ததை தொடர்ந்து கார்த்தியிடம் கேட்டபோது, அவர் சரியான முறையில் பதில் தெரிவிக்காமல் வேலைக்கு வருவதையும் தவிர்த்து வருகிறார். மொத்தம் ரூ. 71 லட்சம் மோசடி செய்துள்ளனர். எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த மோசடி குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோகிலா விசாரணை நடத்தி, செவ்வாய்பேட்டையை சேர்ந்த கார்த்தி, பிரபுமணி ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். தொடர்ந்து இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.