கோட்டை மாரியம்மன் கோயிலில் ரூ. 19 லட்சம் உண்டியல் காணிக்கை

சேலம் மாநகரில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலுக்கு சேலம் மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலில் 3 மாதங்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறுவது வழக்கம். 

இந்நிலையில், நேற்று (ஜூன் 13) கோயிலில் உள்ள 10 நிரந்தர உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது. கோவில் அறங்காவலர் குழு தலைவர் எஸ். டி. என். சக்திவேல், செயல் அலுவலர் அமுதசுரபி, உதவி ஆணையர் அம்சா ஆகியோர் முன்னிலையில் பக்தர்கள், தன்னார்வலர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். 

முடிவில் ரூ. 18 லட்சத்து 95 ஆயிரத்து 605 ரொக்கம், 124 கிராம் தங்கம், 245 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தது.

தொடர்புடைய செய்தி