சேலத்தில் வருவாய் துறையினர் மறியல் போராட்டம்

சேலம் மாவட்ட வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று பணி புறக்கணிப்பு செய்து, கோட்டை மைதானத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க ஒருங்கிணைப்பாளர் அருண்பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், வருவாய், பேரிடர் மேலாண்மை, நில அளவைத்துறை அலுவலர்கள், ஊழியர்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்க சிறப்பு பணிபாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும், தனி ஊதியம் வழங்க வேண்டும், அனைத்து பணியிடங்களையும் நிரந்தர அடிப்படையில் நிரப்ப வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தொடர்புடைய செய்தி