கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சண்முகவள்ளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பி.காம். சி.ஏ. முடித்துள்ள தமிழழகர் கொண்டலாம்பட்டி பகுதியில் வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடை வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் (ஜூன் 5) தமிழழகர் தனது தந்தையிடம் கடையை மேம்படுத்துவதற்காக பணம் கேட்டுள்ளார். இதனால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது தமிழழகர் ஆத்திரமடைந்து தந்தையை இரும்பு கம்பியால் தாக்கினார். மேலும் கழுத்தை கத்தியால் அறுத்தார்.
இதில் படுகாயம் அடைந்த செல்வகுமார் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக நேற்று இறந்தார். மகன் தாக்கியதில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி இறந்ததை தொடர்ந்து கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. மகனை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.