சேலத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள பெரிய ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அருள்குமார் (வயது 35). ரியல் எஸ்டேட் அதிபர். அவருடைய மனைவி கவுரி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அருள்குமார் தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர்களுடைய அலுவலகம் சேலம் புதிய பஸ் நிலையம் அருகே தனியார் வணிக வளாகத்தில் உள்ளது. 

இதனிடையே நேற்று காலை அந்த அலுவலகத்தை திறந்து சுத்தம் செய்வதற்காக ஊழியர் ஒருவர் வந்தார். அப்போது அலுவலகத்திற்குள் அருள்குமார் நிர்வாண நிலையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் உதவி கமிஷனர் ரமலி ராமலட்சுமி, இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

 பின்னர் அவர்கள், அருள்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நிர்வாண நிலையில் அவர் பிணமாக கிடந்ததால் சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களைச் சேகரித்தனர். முதற்கட்ட விசாரணையில் அவர் பலரிடம் கடன் வாங்கியிருந்தார். இதனால் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்ததாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி