சேலம்: மொபட் வாகனத்தில் பதுங்கிய மலைப்பாம்பு

சேலம் கன்னங்குறிச்சி புதிய ஏரி பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் நேற்று இரவு அரசு மருத்துவமனையிலிருந்து தனது இரு சக்கர மோட்டார் வாகனத்தில் வீட்டிற்குச் சென்றார். அப்போது திடீரென வாகனத்திலுள்ளே இருந்து பாம்பு எட்டிப் பார்த்தது. இதனைப் பார்த்து பதறிப்போன பாலமுருகன் உடனடியாகச் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். 

விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மோட்டார் வண்டியில் பதுங்கியிருந்த நான்கடி நீளமுள்ள மலைப்பாம்பை உயிருடன் பிடித்து அப்புறப்படுத்தினர். பிடிக்கப்பட்ட மலைப்பாம்பை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டுசென்று விடுவித்தனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி