சேலம் கோட்டை மைதானம் முன்பு நேற்று பொதுத்துறை ஓய்வூதியர்களின் அமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. ஓய்வூதியர்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்தும் பென்சன் திருத்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும், 8-வது ஊதியக்குழுவின் வரைமுறை குறிப்பில் பென்சன் மாற்றத்தை சேர்க்க வேண்டும், ஓய்வூதிய மாற்றம் மற்றும் 8-வது ஊதியக்குழு பலன்களை 1.1.2026 முதல் நிலுவை தொகையுடன் அமல்படுத்த வேண்டும், ஓய்வூதியர்களின் பென்சன் மாற்றத்தை 1.1.2017 முதல் அமல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.