சேலம் பொன்னம்மாபேட்டை வாய்க்கால் பட்டறை பகுதியில் உள்ள நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தால், தெரு நாய்களை அங்கேயே விட்டுச் செல்வதாக புகார் எழுந்துள்ளது. இதனால் எதிர்ப்பு தெரிவித்து நேற்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் மற்றும் கவுன்சிலர் தெய்வலிங்கம் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.