இதுகுறித்து அவர்கள் கூறும்போது, சுந்தரியிடம் வரதட்சணை கேட்டு அவருடைய கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சிலர் அடிக்கடி தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சுந்தரி தற்கொலை செய்து கொண்டார். மகள் சாவிற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மகுடஞ்சாவடி போலீசில் புகார் கொடுத்தோம். ஆனால் நடவடிக்கை இல்லை. எனவே சுந்தரி தற்கொலைக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டோம் என்று கூறினர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து அவர்கள் மறியலைக் கைவிட்டனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி