இந்நிலையில், சேலம் மேற்கு தாசில்தார் அலுவலகத்தில் நேற்று தாசில்தார் மனோகரன் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் வடக்கு மாநகர செயலாளர் பிரவீன்குமார் மற்றும் நிர்வாகிகள், பள்ளப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடைகளை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து வருகிற மே 1-ந்1-ம் தேதிக்குள் மெய்யனூர் பகுதியில் உள்ள 3 டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்வதாக அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பிஎஃப் பணம் இனி தானாகவே வங்கிக்கு வரும்