சேலம் சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாலாஜி (33) மற்றும் அமானி கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த பிரவீன் (22) ஆகியோர் ஞாயிறு இரவு டூவீலரில் சென்றபோது, சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் கார் மீது மோதி விபத்துக்குள்ளாகினர். இதில் தூக்கி வீசப்பட்ட பிரவீன் மீது லாரி ஏறி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அன்னதானப்பட்டி போலீசார் பிரவீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, விசாரணை நடத்தி வருகின்றனர்.